தொடங்குது “அண்ணாத்த” ஆட்டம்.. -ரஜினி பிறந்தநாளையொட்டி அட்டகாசமான அப்டேட் கொடுத்த படக்குழு..

தொடங்குது “அண்ணாத்த” ஆட்டம்.. -ரஜினி பிறந்தநாளையொட்டி அட்டகாசமான அப்டேட் கொடுத்த படக்குழு..

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு தலைவரின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக அண்ணாத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது படக்குழு..

தொடங்குது “அண்ணாத்த” ஆட்டம்.. -ரஜினி பிறந்தநாளையொட்டி அட்டகாசமான அப்டேட் கொடுத்த படக்குழு..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில்  குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை.

தொடங்குது “அண்ணாத்த” ஆட்டம்.. -ரஜினி பிறந்தநாளையொட்டி அட்டகாசமான அப்டேட் கொடுத்த படக்குழு..

ரஜினி பிறந்த நாளையொட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் இயக்குநர் சிவா , “ ‘அண்ணாத்த’ படக்குழுவினர் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 15-ம் தேதி தொடங்க இருப்பதாக கூறினார்.

Share this story