ரஜினியுடன் டூயட் பாடும் நயன்தாரா… ‘அண்ணாத்த’ ஷூட்டிங் விறுவிறு…

ரஜினியுடன் டூயட் பாடும் நயன்தாரா… ‘அண்ணாத்த’ ஷூட்டிங் விறுவிறு…

‘அண்ணாத்த’ படத்திற்காக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடிக்கும் பாடல் காட்சி இன்று முதல் படமாக்கப்பட்டு வருகிறது.

ரஜினியுடன் டூயட் பாடும் நயன்தாரா… ‘அண்ணாத்த’ ஷூட்டிங் விறுவிறு…

நடிகர் ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரஜினியுடன் டூயட் பாடும் நயன்தாரா… ‘அண்ணாத்த’ ஷூட்டிங் விறுவிறு…

கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட ஷூட்டிங் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் ஒரு மாதம் நடைபெறும் இந்த படத்தின் ஷூட்டிங், தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த ஷூட்டிங் இரண்டு நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் டூயட் பாடும் நயன்தாரா… ‘அண்ணாத்த’ ஷூட்டிங் விறுவிறு…

அதன்பிறகு இதே ஸ்டுடியோவில் இந்த படத்திற்கான சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளது.அத்துடன் இந்த படத்திற்கான மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என தெரிகிறது. இதையடுத்து தயாரிப்பு ‌பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

Share this story