‘அண்ணாத்த’ கெட்டப்பில் ஸ்டைலாக ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

‘அண்ணாத்த’ கெட்டப்பில் ஸ்டைலாக ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

‘அண்ணாத்த’ கெட்டப்பில் ஸ்டைலாக ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரானா காரணமாக ஷூட்டிங் தாமதமாக நடைபெற்று வந்ததது. ஆனால் ரிலீசுக்கு குறுகிய காலமே இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது.

‘அண்ணாத்த’ கெட்டப்பில் ஸ்டைலாக ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

கடந்த மாதம் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் பாடல் காட்சி ஒன்றும், சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி உள்ளிட்ட குழுவினர் சமீபத்தில் ஐதராபாத்திற்கு அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க சென்றனர். தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஷூட்டிங், இந்த மாத இறுதியுடன் முடியவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அண்ணாத்த’ கெட்டப்பில் ஸ்டைலாக ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினியும், சிறுத்தை சிவாவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story