இது மேலயும் காத்திருக்க முடியாது… இந்தியன் 2 படத்திலிருந்து விலகும் ஒளிப்பதிவாளர்!?

இது மேலயும் காத்திருக்க முடியாது… இந்தியன் 2 படத்திலிருந்து விலகும் ஒளிப்பதிவாளர்!?

இந்தியன் 2 படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடக்கி நடந்து வந்தது. படம் ஆரம்பித்தது முதலே படபிடிப்பில் அதிக தாமதம் ஏற்பட்டு வந்தது. அதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் இறந்தனர் . அதையடுத்து படம் பல மாதங்களாக முடங்கியது.

இது மேலயும் காத்திருக்க முடியாது… இந்தியன் 2 படத்திலிருந்து விலகும் ஒளிப்பதிவாளர்!?

இந்தியன் 2 படத்தில் அதிகளவு தாமதம் ஏற்படுவதால் முதலில் இப்படத்தில் கமிட் ஆகியிருந்த ரவிவர்மன் விலகினார். ரவிவர்மனை அடுத்து ரத்னவேலு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்தார். தற்போது ரத்தினவேலுவும் இப்படத்திலிருந்து விலக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது மேலயும் காத்திருக்க முடியாது… இந்தியன் 2 படத்திலிருந்து விலகும் ஒளிப்பதிவாளர்!?

படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்றே தெரியாததால் வேறு எந்த படங்களிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் என்ன தான் பிரச்னை, ஏன் படப்பிடிப்பு தொடங்க இவ்வளவு தாமதம் என்று தெரியாமல் குழம்பியுள்ளனர் கோலிவுட் ரசிகர்கள்!

Share this story