25 வயது ஹீரோவைக் காதலிக்கும் அனுஷ்கா!?

25 வயது ஹீரோவைக் காதலிக்கும் அனுஷ்கா!?

நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்தியாவின் மிகவும் மார்க்கெட் உள்ள நடிகை என்று சந்தேகத்திற்கு இடமின்றி அடித்துக் கூறலாம். ஹீரோக்களுக்கு இணையாக தனி ஆளாக பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நிஷப்தம் படத்தில் மாதவன் உடன் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்தப் படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் குறித்து எந்தவித அப்டேட்-ம் தற்போது வரை வெளியாகவில்லை.

25 வயது ஹீரோவைக் காதலிக்கும் அனுஷ்கா!?

தற்போது அனுஷ்கா இளம் ஹீரோ ஒருவருடன் ஜோடி சேர இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆம், இளம் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி உடன் அனுஷ்கா இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை யு.வி.கிரேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளரனாம். இந்த கதை 40 மற்றும் 25 வயதிற்குட்பட்ட இரண்டு பேருக்கு இடையிலான காதல் கதை என்று கூறப்படுகிறது.

25 வயது ஹீரோவைக் காதலிக்கும் அனுஷ்கா!?

நவீன் பொலிஷெட்டி நடித்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படம் தெலுங்கில் செம ஹிட் அடித்தது. தற்போது ஜதி ரத்னலு என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Share this story