Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

‘தளபதி 65’ படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்… இதுதான் காரணமாம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்க்கார் படத்தை அடுத்து விஜய் மறுபடியும் ஏஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட விஜய் முதல் பாகம் நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாகத்தில் திருப்தி அளிக்காததால் இரண்டாம் பாதியை மட்டும் மாற்றுமாறும் கூறியுள்ளார். எனவே ஏஆர் முருகதாஸ் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏஆர் முருகதாஸ் கூறிய கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததாகவும், அதனால் அவர் தளபதி 65 படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

AR-Murugados

இதனால் அந்தக் கதை கைவிடப்படுகிறதா? இல்லை வேறு இயக்குனர் இயக்குவாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்படத்திற்கு தமன் இசையமைப்பதாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில் விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மாஸ்டர் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணாமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!