ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம்!?

ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம்!?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பான் இந்தியா படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏஆர் முருகதாஸ் கடைசியாக ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

தற்போது ஏஆர் முருகதாஸ் இந்தியா முழுவதும் வெளியக்கூடிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.

ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படம்!?

இந்தப் படத்திற்கு ‘1947’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து பர்பிள் என்டர்டெயின்மென்ட் & ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதற்கிடையில், ஏஆர் முருகதாஸ் பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். அந்தப் படம் ‘தி லயன் கிங்’ படத்தைப் போல முழு லைவ் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story