மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பானி ஆன்தெம்’

மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பானி ஆன்தெம்’

பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘பானி ஆன்தெம்’ (தண்ணீர் கீதம்) இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது யூடுப் சேனலில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பானி ஆன்தெம்’

ஏ.ஆர்.ரஹ்மானின் யூடுப் சேனலுக்கு இதுவரையில் 2.48M சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் முழுக்க குழைந்தைகள் கருப்பு நிற உடை அணிந்து தண்ணீரின் முக்கியத்துவத்தை மிக தத்துரூபமாக விளக்குகின்றனர். மேலும் ”அக்கபெல்லா ஸ்டைலில்” குழந்தைகளின் வசீகரமான குரலும் ,ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் இணைந்து இப்பாடல் கேட்போரை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

தண்ணீரின் அவசியத்தை மக்களுக்கு இசைமூலம் எடுத்துரைத்துள்ள இசைப்புயலுக்கு இப்பாடலுக்காக விருதுகள் பல கிடைத்தாலும் ஆச்சர்யதிற்கில்லை.

மேலும் இப்பாடல் குறித்து பேசியே ஏ.ஆர். ரஹ்மான்,

”நாம் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீரைச் சேமித்து, பாதுகாக்கவில்லை என்றால் நாம் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு வலியுறுத்தும் விதமாக இப்பாடலை நானும் ப்ரசூன் ஜோஷியும் இணைந்து உருவாக்கியுள்ளோம்.

தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு அடித்தளத்தை அமைப்பது மிக அவசியம். தண்ணீர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? போன்றவற்றையெல்லாம் மக்களுக்கு கவனமுடன் நினைவூட்ட வேண்டும். இப்பாடலைப் பாடியிருக்கும் அனைத்துக் குழந்தைகளின் குரல்களும் மாற்றத்தை எதிர்பார்க்கும் நமது இளைஞர்களின் குரல்” என கூறியுள்ளார்.

Share this story