விண்வெளி மங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…

விண்வெளி மங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…

விண்வெளி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் சாதனை மாணவிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்வெளி மங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…

ஆணுக்கு நிகராக பெண்களும் பல சாதனைகளை செய்து வருகின்றனர். ரயில், விமானம், கப்பல் என அனைத்து துறையிலும் இவர்களின் பங்கு அளப்பறியாதது. இதுபோன்று ஆண்களுக்கே சாவலாக இருக்கும் விண்வெளி துறையிலும் தங்களது அபார திறமையால் பெண்கள் ஆர்முடன் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனேவே சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போன்றோர் விண்வெளித் துறையில் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளனர்.

விண்வெளி மங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…

அந்த வரிசையில் சிறுமி உதயகீர்த்திகா சேர்ந்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த இவர், 12ம் வகுப்பில் 92.5% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அதன்பிறகு கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அளவில் இஸ்ரோ நடத்திய விண்வெளி குறித்த ஆய்வுக் கட்டுரையில் முதல் இடத்தை பிடித்தார். இதையடுத்து விண்வெளி துறையில் படிக்க ஆர்வம் காட்டி வந்தார். மாணவியை இந்த ஆர்வத்தை பார்த்து, பிரபலங்கள் உதவி செய்து வந்தனர்.

விண்வெளி மங்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…

இதையடுத்து விண்வெளி பட்டம் பெற்ற உதயகீர்த்திகா, தற்போது போலந்து நாட்டில் உள்ள நாசா விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் விண்வெளிக்கும் செல்லவுள்ளார். தன்னுடைய திறமையால் லட்சித்தியதை அடைந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாதனை மாணவி உதயகீர்த்திகாவுக்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this story