அஜித்தின் ஹிட் பட உரிமைகளை வாங்கி மகனை நடிக்க வைக்க திட்டம் போட்ட போனி கபூர் !

அஜித்தின் ஹிட் பட உரிமைகளை வாங்கி மகனை நடிக்க வைக்க திட்டம் போட்ட போனி கபூர் !

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித், ஹெச். வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். அந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கவே அஜித்தை வைத்து இரண்டாவது படம் தயாரிக்க முன்வந்தார் போனி கபூர்.
அஜித்தின் ஹிட் பட உரிமைகளை வாங்கி மகனை நடிக்க வைக்க திட்டம் போட்ட போனி கபூர் !
தற்போது போனி கபூர் அஜித் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படங்களான ‘வாலி’ மற்றும் ‘ வரலாறு’ படங்களின் ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார். இந்த இரு படங்களின் ஹிந்தி ரீமேக்கில் போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூரை நடிக்க வைக்க உள்ளாராம்.
அஜித்தின் ஹிட் பட உரிமைகளை வாங்கி மகனை நடிக்க வைக்க திட்டம் போட்ட போனி கபூர் !
பாலிவுட்டில் இன்னும் பல ஹிட் படங்களைக் கொடுக்காத அர்ஜுன் கபூர் இந்த ரீமேக் படங்கள் மூலம் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருகிறார் போல.

Share this story