Tuesday, April 13, 2021

கொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…

கொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...

Movie Stills

கலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி மரணம்… இதற்கு காரணம் தமிழ் சினிமாவினர்தான்- பொங்கும் இயக்குனர்.!?

கலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உடல்நல குறைவால் நேற்று இறந்துவிட்டார் என்கிற தகவல்… மீடியாக்களிலும் கோடம்பாக்கம் ஏரியாவிலும் எந்த சலசலப்பையும் உண்டு பண்ணிய மாதிரித் தெரியவில்லை.கடைசி காரியத்துக்கு கூட பல ஜாம்பவான்கள் போகவில்லை என்பது வாய்ப்புத்தேடி அலையும் இளம் இயக்குனர்கள் மத்தியில் ஒரு வித சலசலப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியிருக்கிறது.

shooting

அவரோடு பணியாற்றிய இளம் இயக்குனர்கள் பலரும் அவரைப் பற்றி, அவ்வளவு உயர்வாக்கச் சொல்கிறார்கள். “இத்தனை தேசிய விருதுகள் வாங்கியவர்… இந்திய சினிமாவில் அவர் ஒர்க் பண்ணின அதனை படங்களும் பிரமிப்பை உண்டாக்கிய படங்கள். அவரைப் போயி இந்த சினிமா ஆட்கள் வறுமையில் சாக விட்டுட்டாங்களே ணே” என்று பலரும் கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.

பொதுவாக, சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருப்பவர்கள் ஓரளவுக்கு வசதியாகவே இருப்பார்கள். சிலர் விதிவிலக்காக இருக்கலாம். கிருஷ்ண மூர்த்தி பண்ணின படங்களின் பட்டியலைப் பார்த்தல்,பல தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்க வேண்டும்.ஆனால்,பண விசயத்தில் எப்போதும் கறார் காட்ட மாட்டாராம்! உதவி என்று கேட்கிறவர்களுக்கு அள்ளிக் கொடுப்பாராம். இப்போதெல்லாம் கம்பியூட்டர் வந்து விட்டதால் பீரியட் எஃபெக்ட் வேண்டும் என்றால் செய்து கொடுப்பதற்கு பலர் வந்துவிட்டார்கள். ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னாடி இயக்குனர்களுக்கு இவரைவிட்டால் ஆள் இல்லை என்பதுதான் நிலைமை. கம்பியூட்டர் வந்த பிறகுகூட யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற இயக்குனர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸ்.அப்படி ஒரு பீரியட் படத்திற்காக சமீபத்தில் போய் வந்த இயக்குனர் ஒருவர் சொன்ன தகவல் அதிர்ச்சியின் உச்சம்.

தயாரிப்பாளரைப் பார்ப்பதற்கு முன்னால் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கினால்தான் இயக்குனராக முடியும்.அதற்காக ஒரு இயக்குனர், காலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தியிடம் போய் தன்னோட நிலைமையை அவரிடம் சொல்லியிருக்கிறார். அவரும் புரிந்து கொண்டு எத்தனை ஷீட் வரைய வேண்டும் என்று கேட்டு, அந்தக் காட்சி குறித்த விபரங்களையும் கேட்டு வாங்கியிருக்கிறார்.இயக்குனர் விளக்கமாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இயக்குனர் ஒரு காமெடி ஹீரோவுக்கு கதையைச் சொல்ல அவருக்கும் பிடித்துவிட்டது. இது தொடர்பான சந்திப்பின் போது, பீரியட் காட்சிக்கான படம் வரையக் கொடுத்த தகவலையும் சொல்லியிருக்கிறார். ஒரு நாள் கலை இயக்குனரிடமிருந்து இவருக்கு போன் வந்திருக்கிறது. படம் ரெடி உங்க உதவியாளரை அனுப்புங்க கொடுத்தனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அறிமுக இயக்குனர் தானே வந்து வாங்கிக்கொள்வதாகச் சொல்லியும் உதவியாளரை வரச் சொல்லுங்க போதும் என்று சொல்லியிருக்கிறார். உதவியாளரை அனுப்பிவிட்டு இயக்குனரும் காமெடி ஹீரோவும் உதவியாளரின் வருகைக்காக காத்திருந்திருக்கிறார்கள்.

உதவியாளரும் வேர்க்க விறுவிறுக்க படத்தை வாங்கி வந்து இயக்குனரிடம் கொடுத்திருக்கிறார். ஒட்டி சீலிடப்பட்ட அந்தக் கவரைப் பிரித்து இருவரும் பார்த்திருக்கிறார்கள். இருவருக்கும் அப்படியொரு ஆச்சர்யம்… முதல் படமே மிரட்டலாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படமாக புரட்டிப் பார்த்துக்கொண்டே வருகிறார்கள்.நான்காவது ஷீட்டை புரட்டும்போது ஒரு துண்டு சீட்டு இருந்திருக்கிறது. அதில் ‘மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்… முடிந்தால் உதவுங்கள்’ என்று எழுதியிருந்தாராம். இயக்குனருக்கு பேரதிர்ச்சி, படம் கமிட் ஆனதும் வாங்குற அட்வான்ஸை அப்படியே கொண்டு போய் கொடுக்கணும் என்று நினைத்திருந்தாராம். யாருடைய துரதிருஷ்டமோ அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை.! இப்போது சொல்லிக் கண் கலங்குகிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த இயக்குனர்.

என்னத்த சொல்ல..!? ஆகச் சிறந்த படைப்பாளிகள். கலைஞர்களின் கடைசிக்காலம் இப்படித் துயர் மிகுந்ததாகவே இருக்கிறது. என்ன செய்யப்போகிறது தமிழ் சினிமா.?

Latest Posts

கொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…

கொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...

அது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...

தனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...

Actress

TTN Cinema