அருண் விஜய், விஜயகுமார், இயக்குனர் ஹரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!

அருண் விஜய், விஜயகுமார், இயக்குனர் ஹரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!

நடிகர்கள் அருண் குமார் மற்றும் விஜயகுமார் மற்றும் இயக்குனர் ஹரி மூவரும் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.


திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அருண் விஜய், விஜயகுமார், இயக்குனர் ஹரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!

சமீபத்தில் விஷால், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் அருண் விஜய், விஜயகுமார் மற்றும் இயக்குனர் ஹரி மூவரும் முதல்வரை நேரில் சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அருண் விஜய், விஜயகுமார், இயக்குனர் ஹரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!

தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.அந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this story