ராம்ஜானையொட்டி அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஸ்பெஷல் போஸ்டர். வெளியிட்டது படக்குழு!

ராம்ஜானையொட்டி அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஸ்பெஷல் போஸ்டர். வெளியிட்டது படக்குழு!

ராம்ஜான் திருநாளையொட்டி அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ராம்ஜானையொட்டி அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஸ்பெஷல் போஸ்டர். வெளியிட்டது படக்குழு!

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்டர்’. ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள இக்கூடட்ணியின் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏழுந்துள்ளது. இந்த படத்தில் ரெஜினா ஹீரோயினாக நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையில் உருவாகும் இப்படத்தை ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ராம்ஜானையொட்டி அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஸ்பெஷல் போஸ்டர். வெளியிட்டது படக்குழு!

இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என தென் இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ளது. ராணுவம் தொடர்பான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராம்ஜானையொட்டி அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஸ்பெஷல் போஸ்டர். வெளியிட்டது படக்குழு!

ரிலீசுக்கு தயாராகி வந்த இப்படம் கொரானா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராம்ஜான் திருநாளையொட்டி இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Share this story