சல்பேட்டா இல்லையாம்… ‘சார்பட்டா’… பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியின் பர்ஸ்ட் லுக்!

சல்பேட்டா இல்லையாம்… ‘சார்பட்டா’… பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியின் பர்ஸ்ட் லுக்!

ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ‘சார்பட்டா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் சல்பேட்டா என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் ‘சார்பட்டா’ என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. இப்படம் பாக்சிங் கதைக்களத்தைச் சுற்றி உருவாகியுள்ளது. படத்தில் கலையரசனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

arya for salpetta

இந்தப் படத்திற்காக ஆர்யா, மற்றும் கலையரசன் இருவரும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடலை மிரட்டல் லுக்கில் ஏற்றியுள்ளனர்.

சல்பேட்டா இல்லையாம்… ‘சார்பட்டா’… பா ரஞ்சித் ஆர்யா கூட்டணியின் பர்ஸ்ட் லுக்!

தற்போது இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஆர்யா முறுக்கு மீசையுடன் பாக்சிங் ரிங்கிற்குள் கம்பீரமாக நிற்கிறார். நேற்று வெளியான போஸ்டரும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சண்முகம் தக்ஷன்ராஜ் என்பவர் தயாரிக்கிறார்.

Share this story