ஆர்யா- சயீஷா கூட்டணியின் டெடி… ட்ரைலர் வெளியானது!

ஆர்யா- சயீஷா கூட்டணியின் டெடி… ட்ரைலர் வெளியானது!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா ‘டெடி‘ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்யாவின் மனைவி சயீஷா கதநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பெரும்பாலான அனிமேஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது.

ஆர்யா- சயீஷா கூட்டணியின் டெடி… ட்ரைலர் வெளியானது!

தியேட்டரில் ரிலீஸ் ஆகவிருந்த இப்படம் லாக்டவுனால் தள்ளிப்போனது. தற்போது டெடி படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மார்ச் 12-ம் தேதி வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியதாகக் காணப்படுகிறது. படத்தில் தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார். விறுவிறுப்பான காட்சிகளுடன் முன்னேறுகிறது ட்ரைலர். ட்ரைலரைப் பார்க்கும் போது படம் நல்ல வரவேற்பைப் பெரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் ஆர்யா ‘எனிமி’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

Share this story