அவெஞ்சர்ஸ் படத்தை அடித்து நொறுக்கி மீண்டும் தனது இடத்தைப் பிடித்த அவதார்!

அவெஞ்சர்ஸ் படத்தை அடித்து நொறுக்கி மீண்டும் தனது இடத்தைப் பிடித்த அவதார்!

‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்து மீண்டும் அவதார் படம் உலகின் அதிகம் வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படங்கள் யாவும் உலகளவில் வசூல் சாதனை படைத்தவை. முதலில் இவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படம் தான் உலகின் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையைப் பல ஆண்டுகளாக தக்க வைத்திருந்தது.

அவெஞ்சர்ஸ் படத்தை அடித்து நொறுக்கி மீண்டும் தனது இடத்தைப் பிடித்த அவதார்!

அதையடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் வசூலில் புரட்சி செய்து டைட்டானிக் வசூலில் முதல் இடத்தைப் பிடித்தது. அதையடுத்து அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமாக வெளிவந்த எண்டு கேம் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மட்டுமல்லாமல் உலகின் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையைப் பறித்துக் கொண்டது.
 
தற்போது அவதார் படம் சீனா நாட்டில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன்மூலம் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை மீண்டும் அவதார் படம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அவெஞ்சர்ஸ் படக்குழு அவதார் படக்குழுவை பாராட்டியுள்ளனர்.

Share this story