பல விருதுகளை வென்ற ‘வின்சி டா’… தமிழில் ரீமேக் ஆகும் பெங்காலித் திரைப்படம்!

பல விருதுகளை வென்ற ‘வின்சி டா’… தமிழில் ரீமேக் ஆகும் பெங்காலித் திரைப்படம்!

பெங்காலி இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘வின்சி டா’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.


‘வின்சி டா’ படத்தின்தமிழ் ரீமேக் உரிமைகளை தயாரிப்பாளர் தனஞ்சயன் வாங்கியுள்ளார். “இயக்குனர் ராமும் நானும் இணைந்து திரைக்கதை மற்றும் டயலாக் எழுதியுள்ளோம். போன் கால் மற்றும் வீடியோ கால் மூலம் நாங்கள் வேலை செய்தோம். அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களை இறுதி செய்யும் பணியில் நாங்கள் இருக்கிறோம்.” என்று தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

பல விருதுகளை வென்ற ‘வின்சி டா’… தமிழில் ரீமேக் ஆகும் பெங்காலித் திரைப்படம்!

“வின்சி டா பல சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்க்ரீனிங் செய்ய அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம். மற்றும் அதன் கதை மற்றும் காட்சியமைப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளது.

எனவே இந்தப் படத்தை தமிழிலும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்ய விரும்புகிறோம். ஆனால் இப்படத்தின் இந்தி ரிமேக்கை ஏற்கனவே ஒரு பாலிவுட் ஸ்டுடியோ வங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் முக்கியமானவை. ஹீரோ-வில்லன் வேறுபாடு இல்லை, இறுதியில், ஹீரோ வில்லனாக மாறுகிறார், வில்லன் ஹீரோவாக மாறுகிறார். யதார்த்தமான இந்தப் படம் இறுதியில் உங்களை புல்லரிக்க வைத்துவிடும்” என்றும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ரீமேக்கிற்கான திரைக்கதை தயாராக உள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

Share this story