‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்: காரணம் கண்ணம்மாவா?

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்: காரணம் கண்ணம்மாவா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. கடந்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணம்மாவாகா ரோஷ்ணியும், பாரதியாக அருண் பிரசாத்தும், வெண்பாவாக ஃபரீனாவும் நடிக்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்: காரணம் கண்ணம்மாவா?

இந்த சீரியல் கதைப்படி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் கண்ணம்மா. அவர் எங்கு சென்றார் என தேடி வருகின்றனர். இந்த விஷயம், சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவில் றெக்கை கட்டிப் பறக்கிறது.

கண்ணம்மா கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, ஐபில் எல் கிரிக்கெட் கிரவுண்ட், கனடா, நிலா, கைலாசா என அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளதாக மீம்ஸ்கள் உலா வருகின்றன. கனடா அதிபர் ஜஸ்டின், கண்ணாம்மாவுக்கு கனடா குடியுரிமை வழங்கினார் என்றெல்லாம் கற்பனைப் பதிவுகள் களைகட்டி வருகின்றன.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்: காரணம் கண்ணம்மாவா?

இந்நிலையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. கண்ணம்மா மீம்ஸால் சீரியலின் ரேட்டிங் அதிகரித்துள்ளது. எனவே, ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தால், மாற்றத்துக்கு கண்ணம்மா காரணமில்லை; கண்ணப்பரான (am watching) கமல்ஹாசன் என தெரியவந்துள்ளது.

வருகிற 4ஆம் தேதி முதல் ‘பிக் பாஸ் 4’ தொடங்க உள்ளது. 4ஆம் தேதி அறிமுகப்படலம் முடிந்ததும், 5ஆம் தேதி முதல் 9.30 மணிக்குத் தொடங்கி 10.30 மணி வரை ‘பிக் பாஸ் 4’ ஒளிபரப்பாக இருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்: காரணம் கண்ணம்மாவா?

அதனால், இதுவரை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘செந்தூரப்பூவே’ சீரியல் 7.30 மணிக்கும், 10 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘தேன்மொழி’ சீரியல் 10.30 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிஅது.

8 மணியில் இருந்து 9 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிவந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், இனி 8 மணி முதல் 8.30 மணி வரை அரை மணி நேரம் ஒளிபரப்பாகும். 8.30 மணி முதல் 9 மணி வரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகும்.

Share this story