சீரியல் நடிகையுடன் பிக்பாஸ் ரவி கிருஷ்ணா காதலா ?… கிசுகிசுக்கும் சின்னத்திரை..

சீரியல் நடிகையுடன் பிக்பாஸ் ரவி கிருஷ்ணா காதலா ?… கிசுகிசுக்கும் சின்னத்திரை..

சீரியல் நடிகை நவ்யா சுவாமியுடன் பிக்பாஸ் பிரபலம் ரவி கிருஷ்ணா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகையுடன் பிக்பாஸ் ரவி கிருஷ்ணா காதலா ?… கிசுகிசுக்கும் சின்னத்திரை..

‘வாணி ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நவ்யா சுவாமி. இந்த சீரியலில் நவ்யா நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் 3வது சீசன் மூலம் பிரபலமானவர் ரவி கிருஷ்ணா. பிக்பாஸ் புகழ் மூலம் இவர் நடித்த ’வருதினி பரிணயம்’, ’பவமரடல்லு’ மற்றும் ’தட் இஸ் மகாலட்சுமி’ போன்ற சீரியல்கள் ரசிகர்களிடையே பிரபலமானவை.

சீரியல் நடிகையுடன் பிக்பாஸ் ரவி கிருஷ்ணா காதலா ?… கிசுகிசுக்கும் சின்னத்திரை..

இந்நிலையில் ரவி கிருஷ்ணாவும், நவ்யா சுவாமியும் நடித்த சீரியல் ‘ஆமே கத’. இதில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இருவரும் ஸ்ரீதேவி நாடக நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது நடைபெற்ற நடன நிகழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டனர். அதேபோன்று பல நிகழ்ச்சியில் ஒன்றாகவே வலம் வருகின்றனர். இதனால் இந்த ஜோடி காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Share this story