பிக்பாஸ் 5வது சீசனில் யூடியூப் பிரபலம்… விறுவிறுப்பாக நடக்கும் போட்டியாளர்கள் தேர்வு…

பிக்பாஸ் 5வது சீசனில் யூடியூப் பிரபலம்… விறுவிறுப்பாக நடக்கும் போட்டியாளர்கள் தேர்வு…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 5வது சீசனில் யூடியூப் பிரபலம்… விறுவிறுப்பாக நடக்கும் போட்டியாளர்கள் தேர்வு…

விஜய் டிவியில் பிரம்மாண்ட ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை தமிழில் மட்டும் பிக்பாஸ் நான்கு சீசனை நிறைவு செய்துள்ளது. கொரானா காரணமாக கடந்தாண்டு மட்டும் வழக்கத்துக்கு மாறான அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற்றது.

பிக்பாஸ் 5வது சீசனில் யூடியூப் பிரபலம்… விறுவிறுப்பாக நடக்கும் போட்டியாளர்கள் தேர்வு…

ஆனால் இந்தாண்டு வழக்கபோல் துவங்க திட்டமிடப்பட்டு பிக்பாஸ் 5வது சீசனின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பிரபலங்கள் கனி, பவித்ரா, அஸ்வின், சுனிதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் நகுலிடம் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துக்கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.

பிக்பாஸ் 5வது சீசனில் யூடியூப் பிரபலம்… விறுவிறுப்பாக நடக்கும் போட்டியாளர்கள் தேர்வு…

இதையடுத்து சினிமா பிரபலங்கள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் ராதாரவி, மன்சூர் அலிகான், பாடகர்கள் அந்தோணிதாசன், அறிவு, முரட்டு சிங்கிள்ஸ் இனியன் ஆகியோர் கலந்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிளாக் ஷிப் யூடியூப் சேனலில் புகழ்பெற்ற வினோத்திடம் பேசி வருவதாகவும், அவர் உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்படைந்துள்ளதால் திட்டமிட்டபடி ஜீன் மாதம் 3வது வாரத்தில் பிக்பாஸ் தொடங்கும் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே பிக்பாஸ் 5வது சீசனை கமல் பதில் சிம்பு தொகுத்து வழங்குவார் என பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story