பிக்பாஸ் 5வது சீசனில் இணையும் நடிகை ஷகிலாவின் மகள் ?… களைகட்டும் பிக்பாஸ்…

பிக்பாஸ் 5வது சீசனில் இணையும் நடிகை ஷகிலாவின் மகள் ?…  களைகட்டும் பிக்பாஸ்…

பிக்பாஸ் 5வது சீசனின் தேர்வு பட்டியலில் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 5வது சீசனில் இணையும் நடிகை ஷகிலாவின் மகள் ?…  களைகட்டும் பிக்பாஸ்…

விஜய் டிவியில் நெம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிந்து ஐந்தாவது சீசனின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ், நடிகை ரித்விகா, முகென் ராவ், நடிகர் ஆரி ஆகியோர் டைட்டிலை வின் செய்துள்ளனர்.

பிக்பாஸ் 5வது சீசனில் இணையும் நடிகை ஷகிலாவின் மகள் ?…  களைகட்டும் பிக்பாஸ்…

இதையடுத்து பிக்பாஸ் 5வது சீசன் ஜூன் மாதம் 3 வாரம் முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு படுஜோராக நடைபெற்று வருகிறது. நிறைய பெயர்களை தேர்வு பட்டியலில் வைத்துள்ள பிக்பாஸ் குழு, சில பேரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

பிக்பாஸ் 5வது சீசனில் இணையும் நடிகை ஷகிலாவின் மகள் ?…  களைகட்டும் பிக்பாஸ்…

ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர் ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர்கள் கனி, சுனிதா, பவித்ரா, இனியன், விஜே வினோத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, அவர்கள் கலந்துக்கொள்வது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவரும் பிக்பாஸ் 5வது சீசனில் இணைவார் என்றே தெரிகிறது. இதையடுத்து இந்த சீசன் 4வது சீசனை விட விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story