பிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது ?… கசிந்தது முக்கிய அப்டேட்…

பிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது ?… கசிந்தது முக்கிய அப்டேட்…

பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கப்போவது என்ற முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது ?… கசிந்தது முக்கிய அப்டேட்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஸ்டார் குரூப் சேனல்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ். பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யம் கலந்ததாக இருக்கும். ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெரிய நட்சத்திரம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

பிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது ?… கசிந்தது முக்கிய அப்டேட்…

மற்ற மொழிகளை போன்று தமிழிலும் பிக்பாஸ் பிரபலமான ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்று மகுடம் சூடியுள்ளனர்.

பிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது ?… கசிந்தது முக்கிய அப்டேட்…

ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரானா காரணமாக திட்டமிட்டப்படி தொடங்கவில்லை. அதற்குமாறாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் 5வது சீசன் கடந்தாண்டு போல் தொடங்குமா அல்லது வரும் ஜூன் மாதமே தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் பணிகள் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

Share this story