பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹி திருமணம் முடிந்தது… ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம்!

பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹி திருமணம் முடிந்தது… ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம்!

பிக்பாஸ் வின்னர் ஆரவ் மற்றும் நடிகை ராஹி இருவருக்கும் இன்று திருமணம் முடிந்தது.
மாடலாக இருந்த  ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆரவ். அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது ‘ராஜபீமா’ படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹி திருமணம் முடிந்தது… ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம்!
ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று இருவருக்கும் ஏவிம் எம் கார்டனில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹி திருமணம் முடிந்தது… ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம்!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாண் மாஸ்டர், காயத்ரி ரகுராம், வையாபுரி, கணேஷ் & ஆர்த்தி, தயாரிப்பாளர் சுரபி மோகன், இயக்குனர் சரண் டிஓபி சதீஷ், நடிகை சுஜா வருணி, நடிகர் சிவா (சுஜா கணவர்), இயக்குனர் சரவணன் (சிலம்பாட்டம்), நடிகை சங்கீதா, நடிகை பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் விஜய், இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி, தயாரிப்பாளர் தேவா, பாடலாசிரியர் சினேகன், கணேஷ் வெங்கட்ராம், காஜல் பசுபதி, நடிகர் வருண், வேல்ஸ் இ.பி. அஸ்வின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைதன்), இசையமைப்பாளர் சைமன் கே கிங், நடிகர் சக்தி ஆகிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் ஆரவ், நடிகை ராஹி திருமணம் முடிந்தது… ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம்!
ஏவிஎம் கார்டன் பகுதி திருமண மண்டபமாக மாற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஏவிஎம் கார்டனில் நடைபெற்ற முதல் திருமணம் இதுதான் என்பது குறிபிடிப்பதக்கது.

Share this story