’சத்ய சோதனை’- பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் ரேஷ்மா..

’சத்ய சோதனை’- பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் ரேஷ்மா..

ஒரு கிடாரியின் கருணை மனு திரைப்படம் மூலம் அறியப்பட்டவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா.  விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான  இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது.
இதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒரு காமெடி கதையை தயார் செய்திருக்கிறார் சுரேஷ் சங்கையா. இதில் நாயகனாக பிரேம்ஜி நடித்துள்ளார்.
’சத்ய சோதனை’- பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் ரேஷ்மா..
இந்தப்படத்திற்கு ‘சத்ய சோதனை’  என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் மாதவன் இன்று வெளியிட்டார். சமீத் பரத்ராம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சரண் ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பாளராக வெங்கட் பணியாற்றியுள்ளார்.
’சத்ய சோதனை’- பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் ரேஷ்மா..
இதில் பிரேம்ஜியுடன் ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். அவருக்கும் பிரேம்ஜிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பிக்பாஸ் ரேஷ்மாவும் படத்தில் நடித்திடுக்கிறார்..
’சத்ய சோதனை’- பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் ரேஷ்மா..
இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ள ரேஷ்மா, சத்ய சோதனை குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்..

Share this story