ப்ளூ சட்டை மாறன் எடுத்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தடை!

ப்ளூ சட்டை மாறன் எடுத்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தடை!

திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகர், ப்ளூ சட்டை என்று நெட்டிசன்களால் அழைக்கப்படும் மாறன் தற்போது திரைப்படம் ஒன்றை எடுத்து முடித்துள்ளார். அந்தப்அவர் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு ‘ஆன்டி இந்தியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் எடுத்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தடை!

இந்தகிப் படத்தில் நரேன் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ஆன்டி இந்தியன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்த படக்குழு படத்தை சென்சார் சான்றிதழ் பெற விண்ணப்பித்த போது படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாகக் கூறி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கமுடியாது என்று சென்சார் போர்டு அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன் எடுத்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தடை!

இதனால் படக்குழுவினர் படத்தை வெளியிட நீண்ட நாட்கள் எடுக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. சென்சார் தடை காரணமாக படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this story