பிரித்விராஜ் படத்தில் இணைந்த அஜித் பட வில்லன்!

பிரித்விராஜ் படத்தில் இணைந்த அஜித் பட வில்லன்!

பாலிவுட் நடிகர் விவேக் ஒபேராய் ப்ரித்விராஜ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

மலையத்தில் நடிகர் ப்ரித்விராஜ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று கடுவா. இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார்.

தற்போது ‘கடுவா’ படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் இணைந்துள்ளார். இது விவேக் ஓபராய் மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது படமாகும். விவேக் ஓபராய் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பிரித்விராஜ் படத்தில் இணைந்த அஜித் பட வில்லன்!

ப்ரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் படத்தின் மூலம் விவேக் ஓபராய் மலையாளத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கடுவா என்றால் மலையாளத்தில் புலி என்று அர்த்தமாம். மேலும் இந்தப் படத்தில் திலீஷ் போத்தன், சித்திக், சம்யுக்தா மேனன், அஜு வர்க்கீஸ், சாய்குமார், சீமா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் குருதி, ஸ்டார், ஜன கண மன, கோல்டு கேஸ், பிரம்மம், ஆடுஜீவிதம், பாரோஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Share this story