தனது க்யூட் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா ஷெட்டி !

தனது க்யூட் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா ஷெட்டி !

தனது பிறந்தநாளை குடும்பத்துடன் நடிகை ஷில்பா ஷெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தனது க்யூட் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா ஷெட்டி !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருந்தார். தமிழில் பிரபுதேவாவின் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தனது க்யூட் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா ஷெட்டி !

உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் படுபிசியாக நடித்து வந்த ஷில்பா ஷெட்டி, கடந்த 2009ம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ராஜ் குந்த்ரா – ஷில்பா ஷெட்டி ஜோடிக்கு 9 வயதில் வியான் என்ற மகன் உள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் சாயிஷா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

தனது க்யூட் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா ஷெட்டி !

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பிறந்தநாளை வீட்டில் மிக எளிமையாக கொண்டாடினார். அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story