காதல் சின்னமான தாஜ்மகாலில் நடைபெறும் ”அட்ராங்கி ரே” பட ஷூட்டிங் !

காதல் சின்னமான தாஜ்மகாலில் நடைபெறும் ”அட்ராங்கி ரே” பட ஷூட்டிங் !

பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் இன்று முதல் நடைபெறுகிறது.

இந்த இத்திரைப்படத்தை தனுஷ் ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள படக்குழு படப்பிடிப்பை டெல்லி மற்றும் மும்பை சுற்றுவட்டார பகுதியில் நடத்தவுள்ளது.இன்றைய காட்சிகள் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலில் நடந்துள்ளது. இதுகுறித்த விடியோவை நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாரா அலிகானும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story