அக்ஷய்குமாரின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…
அக்ஷய்குமார் நடிக்கும் பச்சன் பாண்டே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் நடிகர் அஜீத்குமார் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘வீரம்’. கிராமத்து பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். வர்த்தக ரீதியாக நல்ல வசூலை குவித்த இந்தப்படத்திற்கு ரசிகர்களின் நல்ல வரவேற்பும் இருந்தது.
இந்த படத்தை முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. கல்யாண் நடித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. ‘பச்சன் பாண்டே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார்.
ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. கொரானாவால் இப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என அக்ஷய்குமார் அறிவித்துள்ளார்.