அபிஷேக்பச்சன் காட்டிய பச்சைக்கொடி! இந்திக்கு போகும் லிங்குசாமி
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இதுல காட்டப்போறேன்னு சொன்ன ’அஞ்சான்’படம் தோல்வி அடைந்ததால், சண்டைக்கோழி -2 வை கையில் எடுத்த இயக்குநர் லிங்குசாமி.
அப்படத்தின் அறிமுக விழாவில் பேசும்போது, இந்தப்படம் பரபரன்னு பத்திக்கும். சண்டைக்கோழி-1க்கு பிறகு பார்ட் -2க்கு 13 வருசம் எடுத்துக்கிட்டோம். ஆனா, பார்ட்-3க்கு அத்தனை வருசம் காத்திருக்க தேவையில்ல. அடுத்த மாசமே ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பிச்சுடலாம்னு மேடைக்கு கீழே இருந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை பார்த்துச்சொன்னார். ஆனா, அப்படமும் ஓடாததால அமைதியாக இருந்தவர், அதிரடியாக இந்திக்கு தயாராகி வருகிறார்.
அபிஷேக்பச்சனை வைத்து இயக்கப்போகும் அப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் அவர், ராகவா லாரன்சையும் வைத்து இயக்க ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கிறாராம்.