இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா படம்…

இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா படம்…

கோலமாவு கோகில படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா படம்…

ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டுமே நடித்து வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. லேடி சூப்பார் ஸ்டார் நயன்தாரா நடித்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. நெல்சன் இயக்கிய இப்படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். அனிரூத் இசையமைத்தார்.

இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா படம்…

இந்த படம் இந்திய அளவில் வரவேற்பை பெற்றதால், கன்னடத்தில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கவிருக்கிறார். குட்லக் ஜெர்ரி என பெயரிட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா கேரக்டரில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளதால் விரைவில் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story