ஜான்வி கபூர் நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்... ரிலீஸ் அப்டேட் இதோ!
‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் யோகிபாபுவும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவை ரொமான்ஸ் செய்யும் யோகிபாபுவின் நடிப்பு மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

அதையடுத்து கோலமாவு கோகிலா இந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. அந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். அந்தப் படத்தை ஜாசித்தார்த் சென்குப்தா என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு குட் லக் செர்ரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. படம் நேரடியாக ஓடிடி -யில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் நேரடியாக வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

