மிரட்ட வரும் இந்தி 'விக்ரம் வேதா'... டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

vikram vedha

இந்தியில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 கடந்த 2017ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவனும் இணைந்து நடித்திருந்தனர். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

vikram vedha

இந்த படத்தின் வெற்றியை தற்போது இந்தியில் இப்படம் ரீமேக்காகியுள்ளது. இந்த விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் நடித்த  விக்ரம் கேரக்டரில் சயீப் அலிகானும் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

vikram vedha

இந்த படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story