படப்பிடிப்பில் திடீர் உடல் நலக்குறைவு... ரஜினி பட நடிகை மருத்துவமனையில் அனுமதி !
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இந்தி மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'கோச்சடையான்' படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'பிராஜெக்ட் கே' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தீபிகா படுகோனேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பில் இணைந்த அவர், பிசியாக நடித்து வந்தார். அப்போது திடீரென தீபிகா படுகோனே உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் ஒய்வெடுக்கும்படி தீபிகா படுகோனேனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.