வலிமை நடிகை ஹுமா குரேஷியின் அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்கள்!
1645612329972
நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி தற்போது அஜித் உடன் வலிமை படத்தில் நடித்துள்ளார். நாளை வலிமை திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். பிப்ரவரி 24, 2022 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை ஹுமா குரேஷி ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். வலிமை படத்தை அடுத்து அவருக்கு மேலும் பல தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டிலும் ஹுமா பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.