மாலத்தீவில் எல்லாம் விட்டுவிட்டு ஹைதராபாதில் ரகுல் ப்ரீத் சிங்கை தாக்கிய கொரோனா !

மாலத்தீவில் எல்லாம் விட்டுவிட்டு ஹைதராபாதில் ரகுல் ப்ரீத் சிங்கை தாக்கிய கொரோனா !

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சமீபத்தில் தான் படப்பிடிப்பை தொடங்கினார்.

மாலத்தீவில் எல்லாம் விட்டுவிட்டு ஹைதராபாதில் ரகுல் ப்ரீத் சிங்கை தாக்கிய கொரோனா !

அஜய் தேவ்கன் இயக்கத்தில் மே டே(May Day) என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

எனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன். நன்றாக ஓய்வெடுப்பேன். அப்பொழுது தானே விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும். என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அனைவரும் பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் எல்லாம் விட்டுவிட்டு ஹைதராபாதில் ரகுல் ப்ரீத் சிங்கை தாக்கிய கொரோனா !

ரகுலின் இந்த ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்து வருகின்றனர்.

தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்புகளும் ஹைதராபாதில் தான் நடக்கிறது, மேலும் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு பட படப்பிடிப்புகளும் ஹைதராபாதில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story