இந்தியில் கால்பதிக்கும் நடிகை சாய் பல்லவி ?

இந்தியில் கால்பதிக்கும் நடிகை சாய் பல்லவி ?

தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் கால்பதிக்கும் நடிகை சாய் பல்லவி ?

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் மலர் டீச்சராக நம்மிடையே அறிமுகமானவர் சாய் பல்லவி. தமிழ் நடிகையாக இருந்தபோதும், மலையாள படத்தில் மூலம்தான் பிரபலமானார். இதையடுத்து தமிழில் மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் வெற்றி மாறன் இயக்கத்தில் ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தியில் கால்பதிக்கும் நடிகை சாய் பல்லவி ?

தமிழ், மலையாளத்தை அடுத்து தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, ராணாவுடன் ‘விராட பருவம்’, நாக சைத்தன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சாய் பல்லவி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தியில் கால்பதிக்கும் நடிகை சாய் பல்லவி ?

இந்நிலையில் ராஜ மௌலி இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் சத்ரபதி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ஸ்ரேயா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. வி.வி.நாயக் இயக்கவுள்ள இப்படத்தில் நடிகர் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் சாய் பல்லவி ஒப்பந்தமாகிவிடுவார் என கூறப்படுகிறது. இதனால் விரைவில் இந்தி சினிமாவில் சாய் பல்லவியை பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story