செம டென்க்ஷனில் இருக்கும் ஆதிபுருஷ் டீம்!

செம டென்க்ஷனில் இருக்கும் ஆதிபுருஷ் டீம்!

கொரோனா வைரஸ் அதிகரிப்பு பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் அடைந்து வரும் இன்னல்களை சொல்லி முடியாது.

இதனால் திரைத்துறையும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. படப்பிடிப்பிற்காக போடப்பட்ட செட்களில் படப்பிடிப்பு நடத்தப்படாததால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

செம டென்க்ஷனில் இருக்கும் ஆதிபுருஷ் டீம்!

தற்போது பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் செட் அமைக்கப்பட்டு 25% அளவு நடத்தப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் மும்பையில் அதிகமாக இருந்ததால், படக்குழு ஹைதராபாத் பக்கம் வந்தனர்.

செம டென்க்ஷனில் இருக்கும் ஆதிபுருஷ் டீம்!

அங்கு மிகவும் கடினப்பட்டு 10 நாட்கள் இரவு பகலாக உழைத்து குறைந்த நேரத்தில் செட் அமைத்தனர். ஆனால் தற்போது தெலுங்கானா அரசு பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் இங்கும் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தாமதங்களால் ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் எகிறுகின்றதாம். எனவே படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this story