‘அவரை பற்றி கேலியாக பேசுவது நல்லதல்ல’.. டிவி நிகழ்ச்சியில் பாதியில் கிளப்பிய அபிஷேக் பச்சன் !
தனது தந்தையை பற்றி கேலியாக பேசுவது நல்லதல்ல என கூறி டிவி நிகழ்ச்சியிலிருந்து நடிகர் அபிஷேக் பச்சன் கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். நூற்றுக்கணக்காக வெற்றிப்படங்களில் நடித்து சாதனை மனிதனாக திரையுலகில் வலம் வருகிறார். 80 வயதாகும் இவர், தற்போது சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகி வருகிறார்.

அபிதாப்பின் ஒரே மகனான அபிஷேக் பச்சனும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பொதுவாக டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படியொரு நிகழ்ச்சியில் நடிகர் அபிஷேக் பச்சன் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா இணைந்து தொகுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், அமிதாப் பச்சனை கேலி செய்யும் விதமாக பேசினார். இதனால் கோபமடைந்த அபிஷேக் பச்சன், என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் என் தந்தை பற்றி கேலி செய்யும் விதமாக பேசுவது நல்லதல்ல என கோபமாக பேசினார். இதையடுத்து கோபமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

