பிரபல பிக்பாஸ் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !
பாலிவுட்டில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. திரைப்படங்களுடன், வெப் தொடர் மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளனர். இவர் நடிப்பில் வெளியான சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து சல்மான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 13வது சீசினில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சித்தார்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவளித்தனர். இந்த ஆதரவால் பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னராகவும் தேர்வானார்.

இந்நிலையில் 40 வயதாகும் சித்தார்த் சுக்லா, திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனிற்றி இன்று மரணமடைந்தார். சித்தார்த்தின் மறைவு பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

