இந்தி திரைத்துறையில் அதிர்ச்சி… கொரோனாவுக்குப் பலியான பிரபல சீரியல் நடிகை!

இந்தி திரைத்துறையில் அதிர்ச்சி… கொரோனாவுக்குப் பலியான பிரபல சீரியல் நடிகை!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 34.


பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர் யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி.சீரியல்களில் நடித்து பிரபலமானார். அவர் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் பரிசோதனையில் செய்ததில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியது.

இந்தி திரைத்துறையில் அதிர்ச்சி… கொரோனாவுக்குப் பலியான பிரபல சீரியல் நடிகை!

அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐசியூ பிரிவிற்கு மாற்றப்பட்டார். பின்னர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்துள்ளார். திவ்யா பட்நாகர் இறந்தது பாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this story