பேமிலி மேன் சீரிஸில் நடிக்க சமந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!?

பேமிலி மேன் சீரிஸில் நடிக்க சமந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!?

துல்லியமான திரைக்கதை, தேர்ந்த நடிப்பு, கச்சிதமான நடிகர்கள் தேர்வு என எல்லா அமசங்களிலும் மேலோங்கி நின்ற தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் அதிகம் வரவேற்பு பெற்ற சீரிஸ்களில் முக்கியமான ஒன்றாக தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் அமையும். சமந்தா இந்த வெப்ஸ சீரிஸ் மூலமாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பேமிலி மேன் சீரிஸில் நடிக்க சமந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!?

இந்த வெப் சீரிஸில் ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ளதாக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வெப் சீரிஸைத் தடை செய்யவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த வெப் சீரிஸுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்தவர்களின் சம்பளம் பற்றி சினிமா வட்டாரங்களில் பகிரப்படும் பட்டியல் வெளியாகியுள்ளது.

பேமிலி மேன் சீரிஸில் நடிக்க சமந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!?

அதில் சீரிஸின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் இந்த சீரிஸில் நடிக்க 10 கோடி வாங்கியதாகக் கூறப்படுகிறது. சமந்தாவுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், பிரியாமணிக்கு ரூ .80 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

ஷரிப் ஹாஷ்மி (ஜே.கே) ரூ .65 லட்சம், தர்ஷன் குமார் (மேஜர் சமீர்) ரூ .1 கோடி, அஸ்லேஷா தாகூர் (த்ரிதி) ரூ.50 லட்சம், ஷரத் கேல்கர் (அரவிந்த்) ரூ .1.6 கோடி, சன்னி இந்துஜா (மிலிந்த்) ரூ.60 லட்சம் என சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story