வாத்தியாக மாறும் பிரபல பாலிவுட் நடிகர்… ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் ஷூட்டிங் எப்போது ?

வாத்தியாக மாறும் பிரபல பாலிவுட் நடிகர்… ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் ஷூட்டிங் எப்போது ?

இந்தியில் உருவாக உள்ள ‘மாஸ்டர்’ ரீமேக்கில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாத்தியாக மாறும் பிரபல பாலிவுட் நடிகர்… ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் ஷூட்டிங் எப்போது ?

விஜய்யின் மாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது.

வாத்தியாக மாறும் பிரபல பாலிவுட் நடிகர்… ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் ஷூட்டிங் எப்போது ?

மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் ஷைன் நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் யார் வாத்தியாக நடிக்கப்போவது என எதிர்பார்ப்பது இருந்து வந்தது. அதேநேரம் இந்த படத்தை யார் இயக்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வாத்தியாக மாறும் பிரபல பாலிவுட் நடிகர்… ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் ஷூட்டிங் எப்போது ?

இதையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஜய் கதாபாத்திரத்தில் ‌நடிக்க வைக்க படத்தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. சல்மான்‌ கானிடம் படத்தின் கதையை விரிவாக கூறப்பட்டுள்ள நிலையில் எந்தவித பதிலும் கூறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு துவங்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரானா தொற்று குறைந்தவுடன் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story