பாலிவுட்டில் பட வாய்ப்புகளைக் குவித்து வரும் ராஷி கண்ணா… இப்போ எந்த ஹீரோ உடன் தெரியுமா!?

பாலிவுட்டில் பட வாய்ப்புகளைக் குவித்து வரும் ராஷி கண்ணா… இப்போ எந்த ஹீரோ உடன் தெரியுமா!?

நடிகை ராஷி கண்ணா அஜய் தேவ்கன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

தெலுங்கு நடிகை ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தார். தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தாலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராஷி.

பாலிவுட்டில் பட வாய்ப்புகளைக் குவித்து வரும் ராஷி கண்ணா… இப்போ எந்த ஹீரோ உடன் தெரியுமா!?

ஏற்கனவே ஷாஹித் கபூர் உடன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் ராஷி. அந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் ராஷி கண்ணா இணைந்துள்ளார். ‘ருத்ரா’ என்ற தலைப்பில் உருவாகும் அந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

இந்தியில் இரு முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்துள்ளதால் ராஷி கண்ணாவின் மார்க்கெட் அங்கு அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் இன்னும் அதிக படங்களில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this story