90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட்... 'சக்திமான்' வெப் சீரிஸில் நடிக்கும் ரன்வீர் சிங்!?

ranveer-singh-33

ரன்வீர் சிங் 'சக்திமான்' வெப் தொடரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ தொடர்களில் முதலாவதும் முக்கியமானதும் சக்திமான் தான். தற்போதும் 90ஸ் கிட்ஸ்களுக்கு சக்திமான் என்றால் ஒரு பரவசம் உருவாகிறது. தூர்தர்ஷனில் வெளியான இந்த தொடரில் முகேஷ் கண்ணா சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Ranveer

சமீபத்தில் லாக்டவுன் நேரத்தில் கூட சக்திமான் மீண்டும் ஒளிபரப்பான போது அனைவரும் மீண்டும் சிலாகித்துப் பார்த்தனர். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஆதரவு உண்டு என்பது நிரூபணம் ஆனது.

இந்நிலையில் சக்திமான் தொடரை மீண்டும் நவீன வடிவத்தில் வெப் சீரிஸாக இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் இயக்குனர் ஓம்ரவுத் இந்த வெப் சீரிஸை இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this story