கரண் ஜோஹர் இயக்கத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகும் சமந்தா!

akshay-samantha

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதையடுத்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் இந்திய அளவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதையடுத்து சமந்தா பாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்‌ஷய் குமார் நடிப்பில் கரண் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

Akshay

கரண் ஜோஹர் தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, தர்மா புரொடக்ஷன்ஸ் மூலம் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறதாம். 

சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவும் கலந்துகொண்ட ப்ரோமோக்கள் வெளியாகின. இது மேலும் சமந்தா, கரண் கூட்டணியில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சமந்தா சகுந்தலம், யசோதா மற்றும் விஜய் தேவரகொண்டா உடன் குஷி ஆகிய படங்களை கைசவம் வைத்துள்ளார். 

Share this story