29 ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள ஷில்பா ஷெட்டி!

shilpa-shetty-44

நடிகை ஷில்பா ஷெட்டி தவறான செய்தி வெளியிட்டதாக ஊடகங்கள் மீது ரூ 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலி மூலம் விற்பனை செய்து பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

shipha-shetty-23

ராஜ் குந்த்ராவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதையடுத்து ஷில்பா ஷெட்டி தனது கணவர் அப்பாவி என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தனது கணவர் ராஜ்குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், 29 ஊடக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தவறான செய்தி வெளியிட்டதாக ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த ஊடக நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வெளியிட்ட அனைத்து தவறான செய்திகளையும் நீக்க வேண்டும் என்றும் தனக்கு 25 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அந்த வழக்கின் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது

Share this story