சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவை விளாசிய சின்மயி !

பெண்கள் வெளியே வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததால்தான் மீடூ இயக்கம் ஆரம்பித்தது என்று கருத்துக் கூறிய முகேஷ் கண்ணாவை பாடகி சின்மயி சாடியுள்ளார்.
ஹாலிவுட்டில் பெண்கள் தங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களை மீடூ என்ற பெயரில் உலகிற்கு தெரியப்படுத்தினர். பின்னர் இது உலகம் முழுக்க பிரபலமானது. மீடூ என்ற இயக்கம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் இந்த இயக்கம் பிரபலமானது பாடகி சின்மயி மூலமாகத்தான்.
இந்நிலையில், சக்திமான் தொடரின் கதாநாயகனாக நடித்த முகேஷ் கண்ணா, “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. பெண்கள் வேலை செய்யத் தொடங்கிய பிறகு தான் இந்த மீடு பிரச்சினை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்றவாறு பேசினார்.
முகேஷ் கண்ணாவின் இந்தக் கூற்று பல எதிர்ப்பைச் சம்பாதித்தது. பலரும் அவர் கூறிய கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது பாடகி சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் “MeToo பெண்கள் வேலை செய்யத் தொடங்கியதால் தான் உருவானது என்று நடிகர் முகேஷ் கண்ணா கூறினார். ஆண்கள் தங்கள் பிறப்புறுப்புகள் மற்றும் வன்முறைகளால் பெண்களை அடக்கிய போது உருவாகவில்லை போல.
ஓகே மாமா” என்று தெரிவித்துள்ளார்.

