தன் மகனின் மருத்துவ அறிக்கையை காட்ட வேண்டும் – நடிகை ரியாவிடம் கேட்டுக்கொண்டா சுஷாந்தின் தந்தை…

தன்  மகனின் மருத்துவ அறிக்கையை காட்ட வேண்டும் – நடிகை ரியாவிடம் கேட்டுக்கொண்டா சுஷாந்தின் தந்தை…

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார்  என காவல்துறை கூறிய போதிலும், அவர் மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.
தன்  மகனின் மருத்துவ அறிக்கையை காட்ட வேண்டும் – நடிகை ரியாவிடம் கேட்டுக்கொண்டா சுஷாந்தின் தந்தை…
சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகாரளித்துள்ளார்.. தற்கொலை வழக்கை மும்பை காவல்துறையும், கே.கே.சிங் கொடுத்த வழக்கை பாட்னா காவல் துறையும் விசாரித்து வந்தது.. இதனையடுத்து பாட்னா காவல் துறை பதிந்துள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
தன்  மகனின் மருத்துவ அறிக்கையை காட்ட வேண்டும் – நடிகை ரியாவிடம் கேட்டுக்கொண்டா சுஷாந்தின் தந்தை…
பின்னர், பீஹார் அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. மேலும் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளது.. அதோடு, சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணம்  எடுக்கப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்  மகனின் மருத்துவ அறிக்கையை காட்ட வேண்டும் – நடிகை ரியாவிடம் கேட்டுக்கொண்டா சுஷாந்தின் தந்தை…
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியாவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுஷாந்த் சிங் மேற்கொண்ட சிகிச்சைக் குறித்த மருத்துவ அறிக்கையை தன்னிடம் காண்பிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஒருபுறம் நடிகை ரியாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது..

Share this story