பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா கூட்டணியின் 'திருட்டுப் பயலே 2'... இந்தியில் ரீமேக் ஆகிறது!

thiruttu-02

'திருட்டுப்பயலே 2' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. 

தமிழில் திறமைமிக்க இயக்குனர்களில் ஒருவர் சுசிகணேசன். இவர் இயக்கத்தில் வெளியான  பைவ் ஸ்டார், விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடிப்பில் 'திருட்டு பயலே 2' திரைப்படத்தை இயக்கினார் சுசிகணேசன்.

thiruttu

அந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது திருட்டுப்பயலே 2 திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அந்த படத்தை சுசு கணேசன் தான் இயக்கி வருகிறார். படத்திற்கு தில் ஹே கிரே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இதயத்தின் நிறம் சாம்பல் என்று அதற்கு தமிழில் பொருள்.

urvashi-rautela-23

இந்தி ரீமேக்கில் வினித் குமார் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஊர்வசிரத்தேலா கதாநாயகியாக நடிக்கிறார். அக்ஷய் ஓபராய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தி ரீமேக்கிலும் சுசிகணேசன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், தமிழில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என டெக்னீஷியன்கள் அனைவரும் இந்தியிலும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது

Share this story